AIADMK | கோயில் திருவிழாவில் மக்களோடு அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு
கோயில் திருவிழாவில் மக்களோடு அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு
கோயில் திருவிழாவில் மக்களோடு அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு, குன்னூர் மஞ்சு தளா ஹட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு, வழிபாடு செய்தார். குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் போது குன்னூர் மஞ்சு தளா ஹட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அவர் வருகை தந்தார். அவருக்கு அந்தப் பகுதி கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் அங்கு நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் உடன் இருந்தனர்.
