டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி? - இங்கிலாந்து அணியுடன் இன்று பிற்பகல் பலப்பரீட்சை

x

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. டி20 போட்டிகளில் இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 12 முறை இந்தியாவும் 10 முறை இங்கிலாந்தும் வென்றுள்ளன. அடிலெய்டு மைதானம் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சம வாய்ப்பு வழங்கும் மைதானமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக ரிஷப் பண்ட் இன்று சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இன்றையப் போட்டியில் வென்று, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்