இன்று தை அமாவாசை -ராமேஸ்வரத்தில் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு

இன்று தை அமாவாசை -ராமேஸ்வரத்தில் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு
x

தை அமாவாசையையொட்டி இன்று பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.தை அமாவாசையையொட்டி வெளியூர்களில் இருந்து இரண்டு லட்சம் பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கடற்கரையில் கூடும் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறாமல் இருக்க, 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு 5.00 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஸ்படிக லிங்க பூஜை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்