'காசி தமிழ் சங்கமம்' மாநாடு - பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
'காசி தமிழ் சங்கமம்' மாநாடு - பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
காசியில் ஒரு மாத காலம் நடைபெற உள்ள 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை, பிரதமர் மோடி தொடங்கி இன்று வைக்க உள்ளார்.தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையேயான பழங்கால தொடர்பை கொண்டாடும் வகையில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை பிரதமர் மோடி, இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து சுமார் இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் இதில் பிரதிநிதிகளாக பங்கேற்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story