இன்று டிஜிபி-க்கள் மாநாடு - பிரதமர் உரையாற்றுகிறார்

இன்று டிஜிபி-க்கள் மாநாடு - பிரதமர் உரையாற்றுகிறார்
x

டெல்லி பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இன்று நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்கிறார். ஜனவரி 22 வரை நடைபெறும், 3 நாள் மாநாடு நேரடி மற்றும் காணொலி என இருவகைகளிலும் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்கள், என 100-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்கின்றனர். மற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாக கலந்து கொள்கின்றனர். இணையதளக் குற்றங்கள், காவல்துறையின் தொழில்நுட்பம், தீவிரவாத எதிர்ப்பில் உள்ள சவால் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்