பழனி முருகன் கோயில் நவபாஷாண மூலவர் சிலை - வெளியான முக்கிய அறிவிப்பு

பழனி முருகன் கோயில் நவபாஷாண மூலவர் சிலை - வெளியான முக்கிய அறிவிப்பு
x


பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன், அமைச்சர் சக்கரபாணி ,காவல்துறை தென் மண்டல ஐஜி அஸ்ராகார்க் ,கோவில் இணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், வரும் 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பழனி முருகன் நவபாஷாண மூலவர் சிலையை தரிசிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரோப் கார், மின் இழுவை ரயில்களில் அனுமதிக்கபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்