இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் சிறிய ரக SSLV-D2 ராக்கெட்
30 கோடி ரூபாய்க்கும் குறைவான செலவில் தயாரான, இஸ்ரோவின் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சிறியரக 2 செயற்கைக் கோள்களுடன், எஸ்.எஸ்.எல்.வி - டி1 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
ஆனால், ராக்கெட் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதால், அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து 3 செயற்கைக் கோள்களுடன் கூடிய, சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இ.ஓ.எஸ்-07, ஜானஸ் 1, ஆசாதிசாட்-2 ஆகிய 3 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், தற்போது கூடுதல் கவனத்துடன் திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story