இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவர் யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவர் யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
x

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவும், அதேபோல, எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த, ஜூலை 18-ம் தேதி இதற்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இதில், 99 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது, இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208 ஆகவும், தமிழ்நாட்டில் 176 ஆகவும் உள்ளது.மேலும், வாக்காளர்கள் தங்கள் கட்சி உத்தரவை மீறி தன்னிச்சையாக வாக்களிக்கும் பட்சத்தில் வாக்குகள் விகிதம் மாறுபடும், இந்நிலையில், இந்திய அளவில் திரவுபதி முர்மு 60 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்