தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்பு - மத்திய அரசு ஷாக் தகவல்

x
  • தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகபட்சமாக பதிவாகியிருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
  • உலக அளவில் ஒரு சதவீத பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 600-ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
  • பிப்ரவரி 2வது வாரத்தில், தினசரி சராசரியாக 108 பாதிப்புகள் பதிவான நிலையில் தற்போது 966ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.
  • மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்