Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-09-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-09-2022) | Morning Headlines | Thanthi TV
x

சென்னை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு - இன்று காலை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

கன்னியாகுமரியில் இன்று மாலை பாத யாத்திரையை துவக்குகிறார், ராகுல்காந்தி - தேசியக் கொடி வழங்கி, துவங்கி வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்

காஷ்மீரில் 75 ஆண்டுகளாக தேசியக்கொடி ஏற்ற முடியாத இடத்தில் இன்று தேசியக் கொடி பறக்கிறது - நடைபயணத்தின் முடிவில், அதைப்பார்த்து ராகுல்காந்தி மனம் திருந்துவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

முதல்வர் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து, தொகுதி பிரச்சினை குறித்த மனுக்களை அளித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் - முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை ஆட்சியரிடம் 9 பேர் மனு அளித்தனர்

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது - விரைவில், மருத்துவ சேர்க்கை நடவடிக்கைகள் துவங்கும் என எதிர்பார்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை - கொட்டித் தீர்த்த கனமழையால், குளிர்ச்சியான சூழல்.


Next Story

மேலும் செய்திகள்