நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது
ளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.
18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நீட் தேர்வானது 3 ஆயிரத்து 500 க்கும் அதிகமான மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
அரசு பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், மாணவிகள் எண்ணிக்கை 10 லட்சத்து 64 ஆயிரம் பேர், மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நெல்லை, வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் என 18 நகரங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் தரப்பட உள்ளது.
சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் கேள்வி அமைந்திருக்கும். தவறான விடையை மாணவர்கள் தேர்வு செய்தால், ஒரு மதிப்பெண் மைனஸ் என்று கணக்கில் கொள்ளப்படும்.