மாதவிடாய் காரணமாக பலவீனமாக இருந்தது - மீராபாய் சானு

மாதவிடாய் காரணமாக பலவீனமாக இருந்தது - மீராபாய் சானு
Published on

பாரிஸ் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்றபோது மாதவிடாய் காரணமாக தனது உடல் சற்று பலவீனமாக இருந்ததாக இந்திய வீராங்கனை மீராபாய் சானு கூறியுள்ளார். பளுதூக்குதல் போட்டியில் நான்காம் இடம் பிடித்து மீராபாய் சானு, பதக்கத்தை இழந்தார். இந்நிலையில், பதக்கம் வெல்ல தன்னால் முடிந்த அளவு முயன்றதாகவும், ஆனால் பதக்கம் வெல்ல முடியாமல் போய்விட்டதாகவும் சானு கூறியுள்ளார். மாதவிடாயின் மூன்றாம் நாளில் இருந்ததால் சற்று சோர்வுடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com