கோல்கீப்பர் ஸ்ரீஜேஷை கவுரவித்த ஹாக்கி சம்மேளனம்| Indian Goalkeeper PR Sreejesh |Olympics | ThanthiTV

ஓய்வு அறிவித்துள்ள இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷை கவுரவிக்கும் விதமாக, அவரது ஜெர்சி எண்ணான16க்கு ஓய்வளிக்கப்படுவதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், டெல்லியில் ஸ்ரீஜேஷ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்ட ஸ்ரீஜேஷ்க்கு ஹாக்கி இந்தியா சார்பில் 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீஜேஷை கவுரவிக்கும் விதமாக அவரது ஜெர்சி எண்ணுக்கும் இந்திய ஹாக்கி அணியில் ஓய்வு அளிக்கப்படுவதாக ஹாக்கி இந்தியா செயலாளர் போலா நாத் சிங் அறிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com