பீதியை கிளப்பும் புதிய உயிர் கொல்லி.. பல பேர் உயிரை குடித்த வண்டு? "தமிழகத்திற்கு ஹை அலர்ட்..
ஆந்திராவுல ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருவது அந்த மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கு.
பூச்சிக் கடியால் பரவும் வழக்கமான தொற்றுதான். வருஷம்தோறும் வரக்கூடியது. சில ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். குணமடைவார்கள். கடந்த 3 ஆண்டுகள்ல உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இப்ப திடீர்னு இந்த ஆண்டு மட்டும், ஸ்க்ரப் டைபஸ் தொற்று பாதித்த 9 பேர் இறந்திருப்பது கடும் அதிர்ச்சிய ஏற்படுத்தி இருக்கு. ஆந்திர சுகாதாரத்துறை இதுக்கு காரணம் புரியாம முழிச்சிக்கிட்டிருக்கு. நிலைமையின் தீவிரத்த உணர்ந்து, ஸ்க்ரப் டைபஸைப் பற்றி ஆய்வு செஞ்சி, அதை முழுமையாக ஒழிப்பதற்கான உத்திகளைப் பரிந்துரைக்க, தேசிய அளவிலான மருத்துவ நிபுணர்கள் குழுவை உருவாக்க அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டிருக்காரு.
Next Story
