தமிழக காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் தற்கொலை முயற்சி

x

வளசவாக்கத்தில் தொழில் நஷ்டத்தால் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அவரது மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

சென்னை வளசரவாக்கம் காரம்பாக்கம் விவேகானந்தா தெரு, பொன்னி நகர் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வருபவர் தளபதி பாஸ்கர் இவர் காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். மேலும் இவர் போரூர் பகுதியில் சிவலிங்கா சீட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தை வைத்து நடத்தி வந்துள்ளார் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நேற்று இரவு வீட்டில் பாஸ்கரும் அவரது மனைவி தேன்மொழியும் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

இதனை பார்த்த அவரது மகன் உடனடியாக அவர்களை மீட்டு காரம்பாக்கத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளார் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வடபழலில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர் இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அவரது மனைவியுடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்