வீதி வீதியாக ஓட்டு வேட்டை.. பட்டாசு வெடித்த கூட்டணி கட்சி.. பாஜக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

x

#bjp #paulkanagaraj

வடசென்னை பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் திரு.வி.க நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. சார்பாக வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பால் கனகராஜ் சென்னை, திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சார வாகனத்தில் வீதி, வீதியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் சிறப்பாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, அவரை கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகளை வெடித்து வரவேற்றதுடன், வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்