வரிந்து கட்டி இறங்கிய விஐபி-க்கள்.. கணிக்க முடியாத ஸ்டார் தொகுதிகள்.. இந்த லிஸ்டில் மகுடம் யாருக்கு?

x

வரிந்து கட்டி இறங்கிய விஐபி-க்கள்

கணிக்கவே முடியாத ஸ்டார் தொகுதிகள்

இந்த லிஸ்டில் மகுடம் சூடப்போவது யார்?

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவும் நிலையில், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் வழக்கறிஞர் மணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன், பாமக சார்பில் சௌமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சேலம் மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக சார்பில் விக்னேஷ், பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் க. மனோஜ்குமார்

திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கே. சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம், பாஜக சார்பில் ஏ.பி. முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர்.

நீலகிரி தனித் தொகுதியில், திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜக சார்பில் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர்.

கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை. ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகின்றனர்.

திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சச்சிதானந்தம், அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக், பாமக சார்பில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி சார்பில் கயிலைராஜன்போட்டியிடுகின்றனர்.

பொள்ளாச்சித் தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி, அதிமுக சார்பில் கார்த்திகேயன், பாஜக சார்பில் கே.வசந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்குமார் போட்டியிடுகின்றனர்.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, அதிமுக சார்பில் கே.ஆர்.எல். தங்கவேல், பாஜக சார்பில் வி.வி.செந்தில்நாதன்,நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா போட்டியிடுகின்றனர்.

ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் போட்டியிடுகின்றனர்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு. வெங்கடேசன், அதிமுக சார்பில் சரவணன், பாஜக சார்பில் ராம ஸ்ரீனிவாசன்,

நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யாதேவி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்