காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்பு.... உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை........
  • ஈரோட்டில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவு..... 9 இடங்களில் வெயில் சதமடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி...
  • தமிழகத்தில் வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்துங்கள்.... கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்............
  • 2ம் கட்டத் தேர்தல் நடந்த 88 தொகுதிகளில் 60.96 சதவிகித வாக்குகள் பதிவு... தேர்தல் ஆணையம் தகவல்....
  • திரிபுராவில் அதிகபட்சமாக 78.63 சதவிகித வாக்குகள் பதிவு... குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.34 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தகவல்....
  • கர்நாடக மாநிலம் இண்டிகணட்டா கிராமத்தில் வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்.. வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு.....
  • கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கப்பமலையில் 78.3 சதவிகித வாக்குகள் பதிவு.. மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி பொதுமக்கள் வாக்களிப்பு....
  • தேர்தலில் பதிவான வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்கக் கோரும் பொதுநல மனுக்கள் தள்ளுபடி... தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள், சந்தேகம் இருந்தால் வேட்பாளர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்க கோரலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு....
  • வாக்கு இயந்திரங்கள் குறித்து சந்தேகத்தை உருவாக்கிய 'இந்தியா' கூட்டணி மன்னிப்பு கேட்க பிரதமர் மோடி வலியுறுத்தல்... தேர்தல் நடைமுறையில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கான பிரச்சாரம் தொடரும் என, ஜெயராம் ரமேஷ் திட்டவட்டம்... வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது என்று, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதி...
  • நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் பதிவானால் மறுதேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுத்தாக்கல்..... தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்............
  • நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் திடீர் ஒத்திகை... ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து கருப்புப் பூனை படையினர் சாகசம்.....
  • ஐபிஎல் தொடரில் இமாலய இலக்கை எட்டிப் பிடித்து பஞ்சாப் அணி புதிய சாதனை.... கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை 18.4 ஓவர்களில் கடந்து அபாரம்........
  • ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதல்.... இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் லக்னோ-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்