காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
 • கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல்... இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது...
 • கேரளாவில் நாளை 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது... கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் உள்பட14 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு...
 • கேரளாவில் இறுதி கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல்... கல்வீச்சால் பரபரப்பு.... எம்எல்ஏ உள்பட 4 பேர் காயம்...
 • கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஓட்டுப்போடக் கூடாது என மிரட்டல்... துப்பாக்கியுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டியதால் பரபரப்பு...
 • கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஆட்சிகளில் பயங்கரவாத செயல்கள் பாதுகாக்கப்பட்டது... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு...
 • பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதிலேயே இந்தியா கூட்டணியினர் மும்முரமாக இருப்பார்கள் என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டு... ஆண்டுக்கு ஒரு பிரதமர் எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் புகார்...
 • உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி... தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...
 • காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை ஆண்மையற்றவர் என விமர்சனம்... நிரூபிக்க தயார் என பாஜக பிரமுகருக்கு குஜராத் காங்கிரஸ் தலைவர் பதிலடி...
 • ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை இழிவு படுத்தக்கூடிய வகையில் பிரதமர் தொடர்ந்து பேசி வருவதாக கனிமொழி குற்றச்சாட்டு... அரசியல் லாபத்திற்காக வெறுப்பு பேச்சை பிரதமர் பேசலாமா? எனவும் கேள்வி....
 • குற்றம் புரியும் நபர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கைது செய்வது, நேர்மையான தேர்தல் கோட்பாட்டுக்கு எதிரானது இல்லை... டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு...
 • இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்... டெல்லி கருத்தரங்கிற்கு அனுப்பிய கடிதத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
 • மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்தபோது மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...
 • கோவையில் பிரதமர் பங்கேற்ற பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்... வழக்கை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் தொடர்ந்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு....
 • சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம்... மே 2ம் தேதி, தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன்...
 • ஐபிஎல் 40வது லீக் ஆட்டத்தில், நான்கு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி... போராடி தோற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி
 • ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை... ஐதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி...

Next Story

மேலும் செய்திகள்