காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • சென்னை அருகே ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ஆயிரத்து 425 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு.... போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசென்றது தேர்தல் பறக்கும் படை........
  • ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டதால் அதிர்ச்சி..... நெற்றியில் காயம் ஏற்பட்ட நிலையில் தொண்டர்கள் கலக்கம்.....
  • ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..... அரசியல் வேறுபாடுகள் காரணமாக எப்போதும் வன்முறையை நாடக்கூடாது என்று எக்ஸ் தளத்தில் பதிவு......
  • மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை...... பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட உள்ளதாக தகவல்....
  • பா.ஜ.க வீட்டுக்கும் கேடு... நாட்டுக்கும் கேடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் பாய்ச்சல்...... ராகுல் காந்தியின் ஒருநாள் வருகை, பிரதமரின் மொத்த பயணத்தையும் காலி செய்து விட்டதாகவும் பேச்சு....
  • எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பாஜகவுக்கும் தான் பிரச்சினை... ஈபிஎஸ்-க்கும், மத்திய பாஜகவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை என, முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...
  • ஜூன் 4ம் தேதிக்கு பிறகு, அதிமுக தலைமை கண்டிப்பாக மாறும்... அதிமுகவை ஈ.பி.எஸ் கான்ட்ராக்டர்களுக்கு தாரை வார்த்து விட்டதாகவும் தேனி பிரசாரத்தில் அண்ணாமலை குற்றச்சாட்டு.....
  • ஜூன் 4ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார்கள் என்பது தெரியும்... பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது என, அரியலூர் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி…
  • பிரதமர் மோடியின் ஆட்சி ஒரு துக்ளர் தர்பார்..... தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஆவேசம்....
  • நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை என்னுடைய போராட்டம் ஓயாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்..... எடப்பாடி பழனிசாமியால் மோடியை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா என்றும் காட்டம்...
  • ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதல்.... இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை....
  • கோட் படத்தில் நடிகர் விஜய்யின் குரலில் முதல் பாடல்... இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்