காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • இன்று தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி சென்னை தியாகராய நகரில் வாகனம் மூலம் பேரணியாக செல்கிறார்... பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்...
  • சென்னை தியாகராய நகர், ஜி.எஸ்.டி. சாலை, மவுன்ட் பூந்தமல்லி சாலை உள்ளிட்ட இடங்களில் இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்... டிரோன்கள் பறக்கவும் தடை - 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிப்பு...
  • தேர்தலின் போது மட்டுமே மக்களை பார்க்க வருவார், பிரதமர் மோடி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்... புயல், வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் வரவில்லை என்றும் தருமபுரியில் திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து பேச்சு...
  • பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் அதிகரிப்பு... மத்திய சென்னையில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்...
  • 10 ஆண்டுகளாக மீனவர்களின் துன்பங்களை வேடிக்கை பார்த்த கட்சி பாஜக... ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்...
  • அரசு ஊழியர்களை பார்த்து அதிமுக பொது செயலாளர் ஈ.பி.எஸ். நீலிக்கண்ணீர் வடிக்கிறார்... அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டிய நிலையில், திமுக கண்டன அறிக்கை...
  • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் கட்சியின் அடிச்சுவடு என விமர்சித்த பிரதமர் மோடி... இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்...
  • சாமானியர்களுக்கு அரசு கஜானாவை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது... இதுவரை நண்பர்களிடம் மோடி காட்டிய கருணை போதும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அறிக்கை...
  • வருகிற 26ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் கேரளாவில், 194 வேட்பாளர்கள் போட்டி.... இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது, தேர்தல் ஆணையம்.....
  • ஐ.பி.எல். தொடரின் 22வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி... கொல்கத்தா அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தல்...
  • ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை... இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது...

Next Story

மேலும் செய்திகள்