தேர்தல் தேதியை மாற்றி கூறிய பெண்... - குழம்பிய பாஜக தொண்டர்கள்

x

தேர்தல் தேதியை மாற்றி கூறிய பெண்...

குழம்பிய பாஜக தொண்டர்கள்

#nagapattinam #loksabhaelection2024 #thanthitv #bjp

நாகையில், மக்களவைத் தேர்தல் தேதியை தவறாகக் கூறி பா.ஜ.க. பெண் நிர்வாகி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் சாலையோரத்தில் நின்ற பொதுமக்கள் குழப்பமடைந்தனர். நாகை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ரமேஷ், திறந்தவெளி வாகனத்தில் தனது தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அவருடன் வாகனத்தில் நின்று கொண்டு சென்ற பா.ஜ.க. பெண் நிர்வாகி, வேட்பாளர் ரமேஷ் மற்றும் மோடியை புகழ்ந்தபடி பிரச்சாரம் செய்து, ஏப்.19-க்கு பதிலாக ஏப்.24-ஆம் தேதி தேர்தல் எனக்கூறி வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்