`நடனத்துடன் வாக்கு சேகரிப்பு' - களை கட்டிய பாஜக வேட்பாளரின் பிரசாரம்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். திருவல்லிக்கேணி கால்வாய் சாலை, அயோத்திக் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த வினோஜ் பி. செல்வம், தற்போதைய எம்.பி-யை காணவில்லை என போஸ்டர் ஒட்டி தேட கூடிய நிலை உள்ளது எனவும், மத்திய சென்னையில் மக்கள் ஏழ்மையாகவே இருக்கிறார்கள், மத்திய சென்னை எந்த வளர்ச்சியும் அடையவில்லை எனவும் பேசினார். வினோஜ் பி. செல்வத்திற்கு ஆதரவாக பாஜக மகளிர் அணியினர் மற்றும் திருநங்கைகள் நடனமாடி வாக்கு சேகரித்தனர்.
Next Story
