"அதிமுகவிற்கு பாஜக கொடுத்த Award" - காமெடியாக சீண்டிய CM ஸ்டாலின்

x

எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் பாஜகவை எதிர்க்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கரசங்கால் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை, காங்கிரசின் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, மக்களுக்கு நன்மை செய்வது மட்டுமே நம்முடைய ஒரே குறிக்கோள் என்றார். அதிமுக ஆட்சிக்கு மத்திய அரசு விருது கொடுத்திருப்பதை திரைப்பட காமெடியை குறிப்பிட்டு விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவை கொள்கை எதிரி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்