தமிழகம் முழுவதும் நாமினேஷன் செய்த நட்சத்திர வேட்பாளர்கள் - யார் யார் எந்த தொகுதி

x

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் அமைச்சர் பொன்முடி தலைமையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்...

தென் சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெ.ஜெயவர்தன், தெற்கு வட்டார துணை ஆணையா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்...

மேலும், நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆட்சியர் கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்...

பெரம்பலூர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கற்பகத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்