"எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தை அழிக்க நினைத்தார்கள்" - மேடையில் பிரதமர் மோடி ஆவேசம்

x

மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம், பலூர்காட் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த உத்தரவாத பத்திரம் வெளியானதில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்து விட்டதாக கூறிய பிரதமர் மோடி, மேற்கு வங்க மக்கள், மத்திய அரசுத்திட்டங்களின் பயன்கள் சென்றடையும் என்பதை உணர்ந்து அச்சத்தில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். எமர்ஜென்சி காலத்தில் இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க நினைத்தவர்கள் தான், இந்திய அரசியல் சாசனத்தின்படி நடைபெறும் தேர்தல் முடிவுகளை நிராகரிக்க வேண்டும் என கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்