மீன் சமைத்து வாக்கு சேகரித்த தமிழிசை சௌந்தரராஜன்

x

மீன் சமைத்து வாக்கு சேகரித்த தமிழிசை சௌந்தரராஜன்

#electioncampaign #bjp #tamilisaisoundararajan

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான தமிழிசை சவுந்திர ராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அங்கிருந்த மீனவ மக்களிடம் கலந்துரையாடி தாமரை சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள மீனவர் ஒருவரது வீட்டிற்கு சென்று, மீன் சமைத்து அவர்களுடன் உணவருந்தி அவர் பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திரளான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்


Next Story

மேலும் செய்திகள்