மீனவர் வீட்டில் மீன் வறுத்து - வாக்கு சேகரித்த தமிழிசை

x

#thanthitv #electioncampaign #bjp #tamilisaisoundararajan

மீனவர் வீட்டில் மீன் வறுத்து - வாக்கு சேகரித்த தமிழிசை

மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த தமிழிசை சௌந்தராஜன், மீன் வறுத்து தன்னுடன் வந்த தொண்டர்களுக்கு பரிமாறினார். தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், பட்டினப்பாக்கத்தில் உள்ள மீனவ பகுதிகளில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மீனவப் பெண்களிடம் நலம் விசாரித்து நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஆதரவு கோரினார். அப்போது, மீனவர் ஒருவரது வீட்டில் சுட சுட மீன் வறுக்க, அதை சாப்பிட்டு மகிழ்ந்தார். மேலும், தன்னுடன் வந்த தொண்டர்களுக்கும் தானே மீன் வறுத்து பரிமாறினார்


Next Story

மேலும் செய்திகள்