டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதி வாக்கு சேகரிப்பு | DMK

x

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, பொழிச்சலூர் ஊராட்சி பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்த அவர், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த பகுதியில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திய கருணாநிதி, பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகளை நேரில் சந்தித்த அவர், திமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பரப்புரை மேற்கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்