கோவை களத்தை அதகளம் செய்யும் சிங்கை ராமச்சந்திரனுக்கு மக்கள் வரவேற்பு

x

கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராமநாதபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம், கோட்டை மேடு, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமனுடன் சென்று பிரச்சாரம் செய்தார். பின்னர், தெரு தெருவாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் சிங்கை ராமச்சந்திரனை வரவேற்றனர். கூட்டணிக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்