ராமதாஸ் திடீர் கடிதம்... உருக்கமான கோரிக்கை... | Ramadoss

x

ராமதாஸ் திடீர் கடிதம்... உருக்கமான கோரிக்கை... | Ramadoss

#LokSabhaElection2024 #ElectionCommission #BJP #PMK #Ramadoss

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக - பாமக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Vovt

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தன்னுடன் அரசியலில் களமிறங்கியவர்களுக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டதாகவும், மனதால் தளராமல் அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரை வழிகாட்ட தயாராக உள்ளதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாமக எப்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் வலிமையாக உள்ளதோ, அப்போதெல்லாம் தமிழ்நாடும் வலுவாக இருந்துள்ளதாகவும், கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாட்டை வலிமைப்படுத்தவே, பாமக இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என நினைப்பதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக - பாமக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்