"இந்திய பிரதமர் யாரென்று முதல்வர் ஸ்டாலின் சொல்லுவார்" - காதர் மொய்தீன் பேச்சு

x

நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் தோல்வி நிச்சயிக்கப்பட்டு விட்டதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், இந்தியாவில் யார் பிரதமராக வரவேண்டும் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லப் போகிறார் எனவும், அதனை கேட்டு இந்தியா நாடே அதிசயிக்கப் போகிறது எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்