பிரசாரத்தை முடித்து விட்டு திடீரென கோவிலுக்குள் புகுந்த ஓபிஎஸ்

x

பிரசாரத்தை முடித்து விட்டு திடீரென கோவிலுக்குள் புகுந்த ஓபிஎஸ்

#ramanathapuram #ops #temple #thanthitv

ராமநாதபுரம் அருகே அமைந்துள்ள ராமகிருஷ்ணா மடத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வழிபாடு நடத்தினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று ராமேஸ்வரம் நகர் பகுதி முழுவதும் இறுதிகட்ட பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, மேலவாசல் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திலும், எம்.ஆர்.டி நகர் பகுதியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி கோயிலிலும் அவர் வழிபாடு நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்