"சாதாரண கிராமத்திலும் UPI.." - வைரலாகும் எல்.முருகன் பேசிய விடியோ

x

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், பிரசாரத்துக்கு செல்லும் வழியில் விவசாயிகள், வியாபாரிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் சாலையோர பழக்கடையில் பழங்களை வாங்கிய எல்.முருகன், டிஜிட்டல் பேமெண்ட் முறையில் மொபைலில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தினார். சாதாரண கிராமத்திலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இருக்கும் அளவிற்கு நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்