பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க வந்த நமீதா - மறுக்கப்பட்ட அனுமதி

x

#thanthitv #bjp #namitha #modimeeting

பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க வந்த நமீதா - மறுக்கப்பட்ட அனுமதி

மேட்டுப்பாளையத்தில் பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு வந்த நடிகை நமீதாவை போலீசார் விவிஐபி கேட் வழியாக அனுமதிக்க மறுத்ததால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விவிஐபி கேட் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் செல்லும் வழிக்கு சென்றார். அங்கிருந்த போலீசார் அவரை விவிஐபி கேட் வழியாக செல்லுமாறு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து நமீதா மீண்டும் விவிஐபி கேட் பகுதிக்கு வந்த நிலையில், போலீசார் அனுமதிக்க மறுத்தனர். அப்போது அங்கும் இங்கும் அலைகழிக்கப்பட்ட நமீதா, கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து போலீசார் விவிஐபி கேட் வழியாக நமீதாவை செல்ல அனுமதித்தனர்


Next Story

மேலும் செய்திகள்