நெருங்கும் தேர்தல்..! - முக்கிய கட்சிகள் மீது பாய்ந்த வழக்கு
கரூரில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இன்றி ஏராளமான நபர்களுடன் பேரணியாக சென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது கரூர் நகர காவல் துறையும், பாஜக வேட்பாளர் மீது தாந்தோணிமலை காவல்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
Next Story
