`கோட்ட அழிங்க மறுபடியும் ஆரம்பிப்போம்' - கலாய்த்துவிட்ட வடசென்னை பாஜக வேட்பாளர்
#paulkanagaraj #vadachennai #bjp
மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை, ஆர்.கே.நகர் பகுதியில் வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளரான பால் கனகராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 41வது வார்டு மற்றும் 47வது வார்டு பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய, பால் கனகராஜ், பாதாள சாக்கடை திட்டம் போன்றவற்றை திமுக இன்னும் நிறைவேற்றாத நிலையில் மீண்டும் பரோட்டா சூரி சொல்வது போல் கோட்டை அழித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து செய்வோம் என்று கூறுவதாகக் குற்றம் சாட்டினார்... மேலும், பாஜகவிற்கு வாக்களித்தால் அந்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
Next Story
