"மனைவி அக்கவுண்டில் வெறும் 8 ரூபாய்" - ஜர்க் ஆக வைத்த ஜெயக்குமார் மகனின் சொத்து மதிப்பு

x

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சில முக்கிய வேட்பாளர்கள், பிரமாண பத்திரங்களில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், அவரது மனைவி, மகள் பெயரில் 86 லட்சம் மதிப்புடைய அசையும் சொத்துக்களும், 12 கோடியே 95 லட்சம் மதிப்புடைய அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். சொந்த கார் இல்லை என்றும் மனைவி வங்கி கணக்கில் 8 ரூபாய் மட்டுமே இருப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தனது பெயரில் 329 சவரன் தங்க நகை, ஒரு கார், ஒரு பைக், வங்கி சேமிப்புகள் என மூன்று கோடியே 21 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 11 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 943 மதிப்புடைய அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 4 லட்சத்து 69 ஆயிரத்து 463.41, அசையா சொத்துகளின் மதிப்பு 14 லட்சம் என மொத்தம் 18 லட்சத்து 69 ஆயிரத்து 463 ரூபாய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் திண்டுக்கல்லில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கிடம் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு 4 லட்சத்து 54 ஆயிரத்து 725 ரூபாயும் அசையா சொத்தின் மதிப்பு 12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 17 லட்சத்து 4 ஆயிரத்து 725 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க கூட்டணியில் திண்டுக்கல்லில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் திலக பாமாவின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 68 லட்சத்து 21 ஆயிரத்து 206 என்றும் அதில் அசையும் சொத்து மதிப்பு 1 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரத்து 206 ரூபாயும் அசையா சொத்தின் மதிப்பு 1 கோடியே 50 லட்சத்து 75 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்