"53 வருட அரசியல் வாழ்க்கையில் இப்படி பார்த்ததில்லை.."கடலூரில் கொதித்தெழுந்த கார்கே

x

#thanthitv #mallikarjunkharge #neyveli #cuddalore

"53 வருட அரசியல் வாழ்க்கையில் இப்படி பார்த்ததில்லை.."கடலூரில் கொதித்தெழுந்த கார்கே

கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகிய இருவரையும் ஆதரித்து, நெய்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது,

மத்திய பாஜக அரசு, மக்கள் நலத்திட்டங்கள், பட்ஜெட் உள்ளிட்ட அனைத்திலும், ஆளுநரை வைத்து தொடர்ந்து தமிழக அரசுக்கு இடையூறு செய்வதாக குற்றம்சாட்டினார். 53 வருடத்தில் நான், எம்எல்ஏ எம்பி என பல பதவிகளை வகித்த நிலையிலும், இதுபோன்று ஒரு ஆளுநரை பார்த்ததில்லை என தெரிவித்தார். பாஜக அரசின் செயல்களுக்கு முடிவு கட்ட, இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கார்கே, தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்