"தாலிக்குத் தங்கம், மடிக்கணினி மீண்டும் வழங்கப்படும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

x

#trichy | #AIADMK

"தாலிக்குத் தங்கம், மடிக்கணினி மீண்டும் வழங்கப்படும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா, கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வரும்போது, தாலிக்குத் தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்