``ஆணவத்தின் உச்சத்தில் தமிழச்சி தங்கபாண்டியன்'' - விளாசிய ஜெயவர்தன்

சென்னை, கே.கே.நகர் பகுதியில் தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பிரசாரத்தை தொடங்கினார். இதற்கு முன்பாக அப்பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார். அவருக்கு ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார் என விமர்சித்தார்..

X

Thanthi TV
www.thanthitv.com