"மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது" - பிரகாஷ் காரத் விமர்சனம்
தமிழகத்தில் தன்னை பிரிட்டிஷ் காலத்து வைசிராய் என நினைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் விமர்சித்தார்... மதுரை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பரப்புரையின் போது இவ்வாறு தெரிவித்தார்... பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது என்று தெரிவித்த அவர், அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை உயர்த்திப் பிடிப்பது அரசமைப்பு சட்டத்தின் படி எதிரானது என சாடினார்...
Next Story
