இன்று மாலை முதல் அமலுக்கு வரும் விதிமுறைகள்-இப்போதே பரபரக்கும் தமிழகம்..தயார் நிலையில் பறக்கும் படை

இன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது... நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதுக்கோட்டையில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏதுவாக வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன... அவற்றில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது...

X

Thanthi TV
www.thanthitv.com