"அதுக்கு நாம பலியாகிட கூடாது" - களத்தில் டஃப் ஃபைட் தரும் கணபதி.. கோவையில் அடித்து ஆடும் திமுக

x

கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கிராமப் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்...

கணபதி ராஜ்குமார் தான் போட்டியிடும் தொகுதிக்குட்பட்ட குளத்தூர், வெங்கடாபுரம், நீலம்பூர், அரசூர், சின்னியம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்... அவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்... திமுக அரசாங்கம் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை செய்துள்ள பல்வேறு திட்டங்களையும் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார்... முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வர் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்பட பல முக்கியமான திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கிய கணபதி ராஜ்குமார்

தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் இதே போல பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்