காங். தேர்தல் அறிக்கை - பிரதமர் மோடி விமர்சனம் | Delhi | PM Modi | Congress Manifesto

உத்தரப் பிரதேச மாநிலம் சாஹரன்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சக்தியை வழிபடும் நாடு தான் இந்தியா என்றும், துரதிருஷ்டவசமாகச் சக்திக்கு எதிராகவே தங்களது போராட்டம் என இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார். இந்தியா கூட்டணி என்றால் கமிஷன் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றால் தொலைநோக்குத் திட்டம் என்றும் பொருள் என குறிப்பிட்ட பிரதமர், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் தொகுதிகளில் கூட வேட்பாளரை நிறுத்துவதற்குக் காங்கிரஸ் கட்சிக்குத் துணிச்சல் இல்லை என விமர்சித்தார். இந்திய விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களுக்கு முன்பே முடிந்து விட்டதாகக் குற்றம் சாட்டிய பிரதமர், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் நிலவிய முஸ்லிம் லீக் கட்சியின் அதே சிந்தனைகளையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com