கணிக்க முடியாத ஸ்டார் தொகுதிகள் களத்தில் டஃப் கொடுக்கும் VIP-க்கள் - காங்கிரஸின் மெகா ஸ்கெட்ச்

x
  • கணிக்க முடியாத ஸ்டார் தொகுதிகள்
  • களத்தில் டஃப் கொடுக்கும் VIP-க்கள்
  • தமிழகத்தில் காங்கிரஸின் மெகா ஸ்கெட்ச்
  • அறிவிக்கப்படாத அந்த 2 இடத்தில் யார்?
  • காங்கிரஸ் கட்சி சார்பில் 46 தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்... அது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.
  • வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, காரசார பிரஸ் மீட், மேடை விளாசல் என மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் 46 தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். தமிழகத்தில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது
  • திருவள்ளூர் தனித்தொகுதிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில், வார்ரூரம் பொறுப்பாளராக செயல்பட்டு, அம்மாநில காங்கிரஸின் வெற்றிக்கு உதவியவர். கட்சி தலைமைக்கு நெருக்கமாக உள்ள நிலையில், அவருக்கு திருவள்ளூர் தனித்தொகுதி வழங்கப்பட்டுள்ளது
  • கிருஷ்ணகிரி தொகுதியில் சிட்டிங் எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லக்குமார். தற்போது கே. கோபிநாத்தை இந்த தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்துள்ளனர். கோபிநாத் இதற்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர்.
  • கரூர் தொகுதியில் ஜோதிமணி எம்பி மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த தேர்தலில், கடுமையான போட்டிக்கு மத்தியில் வெற்றி வாகை சூடியவர் ஜோதிமணி. இந்த நிலையில், அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
  • கடலூர் தொகுதியானது முன்பு திமுகவிடம் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது... தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த முறை ஆரணி தொகுதியில் எம்கே விஷ்ணு பிரசாத் வெற்றி வாகை சூடினார்.
  • சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் சிட்டிங் எம்பியாக இருந்த நிலைியல், மீண்டும் அதே தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதியில் சொந்த கட்சியினரிடையே இவர் மீது அதிருப்தி நிலவிய நிலையில், கார்த்திக் சிதம்பரத்திற்கு ஏற்றபடி களத்தை மாற்றி தந்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
  • விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் மேலிட பொறுப்பாளர் என ஆக்டிவ் காங்கிரஸ் காரராக வளம் வருபவர். தற்போது விஐபி தொகுதியில் மும்முனை போட்டியை எதிர்கொள்ளவுள்ளார்
  • கன்னியாகுமரி தொகுதியில், மீண்டும் களமிறக்கப்படுகிறார் விஜய் வசந்த். 2021ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின் போது பழுத்த அரசியல்வாதியான, பாஜகவை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைச் செய்தார்.
  • அறிமுகப்படுத்தப்பட்ட 7 வேட்பாளர்களும் முன்பே வெற்றிகளை பதிவு செய்தவர்கள் என்பதால், நம்பிக்கையுடன் மக்களவை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
  • மயிலாடுதுறை, மற்றும் திருநெல்வேலிக்கான வேட்பாளர் பட்டியல் மட்டும் இன்னும் வெளிவராத நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்