கேரளா வரும் பிரியங்கா - ராகுலுடன் இணைந்து சுற்றுப்பயணம்

x

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரியங்கா காந்தி வருகிற 20-ந்தேதி கேரளாவுக்கு வருகை தர உள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடும் நிலையில், அங்கு அவர் தொடர்ந்து 2 நாட்கள் ரோட் ஷோ உள்பட சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அசத்தினார். இந்நிலையில், கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் 20 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில், பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்