"கோவை அதிமுகவின் இரும்புக்கோட்டை" - கர்ஜித்து சொன்ன ஈபிஎஸ்

x

#Kovai | #electioncampaign | #AIADMK

"கோவை அதிமுகவின் இரும்புக்கோட்டை" - கர்ஜித்து சொன்ன ஈபிஎஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேனீக்கள் எறும்புகள் போன்று உழைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்...

கோவை கொடிசியா மைதானத்தில் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து ஈபிஎஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது... இதில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்... அப்போது பேசிய ஈபிஎஸ், கோவை அதிமுகவின் இரும்புக்கோட்டை எனவும், அதை யாராலும் அசைக்க முடியாது என மீண்டும் அதிமுகவினர் நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்