"அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான்" - ஜவாஹிருல்லா பேச்சு

x

#AIADMK | #electioncampaign

"அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான்" - ஜவாஹிருல்லா பேச்சு

அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தான் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து, பேகம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஜவாஹிருல்லா, வடமாநில மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டதாகவும், தமிழகத்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் டெபாசிட் இழப்பார்கள் என்றும் தெரிவித்தார். பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தால், டெபாசிட் போய்விடும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தனித்துப் போட்டி என நாடகமாடுவதாக கூறிய அவர், மோடியையும், மத்திய அரசையும் விமர்சனம் செய்ய ஈபிஎஸ் பயப்படுவதாகவும் சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்