இந்த மருந்துகளுக்கு `0’ வரி... "இனி ரூ.7 லட்சம் வரை மிச்சம்" - விலை பட்டியல் இதோ
இந்த மருந்துகளுக்கு `0’ வரி "இனி ரூ. 7 லட்சம் வரை மிச்சம் கொடிய கேன்சருக்கு குறைந்த விலையில் மருந்து விலை பட்டியல் இதோ“
மருத்துவ துறைய பொறுத்த வரைக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் எல்லாம் 3 விதமான ஜிஎஸ்டிக்குள்ள இருக்குதுங்க. எந்த வகை மருந்து எந்த நோய்க்கானது என்பதை பொறுத்து இது மாறும். உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் எல்லாம் குறைவான Slab-ல தான் இருக்குது. ஆனாலும் கூட ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு, அந்த நோய்க்கான சிகிச்சைக்கே மாசம் லட்சக்கணக்குல செலவு பண்ணும் சூழலில் இருக்க்றவங்களுக்கு ஜி.எஸ்.டி. இன்னும் கூடுதல் சுமையா மாறிடுது. பல ஆண்டுகளா மருந்து நிறுவனங்கள், பொதுமக்கள், மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துட்டு வந்தாங்க. இதனால, முக்கியமான பல்வேறு மெடிசின்கள், மருத்துவதுறையில பயன்படுத்தற பரிசோதனை கருவிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைச்சிருக்காங்க. டிவி.ஏசி,ஃபிரிட்ஜ்,கார்னு- நிறைய பொருட்களுக்கு குறைச்சிருந்தாலும் அன்றாடம் புதுபுது பொருட்கள வாங்கபோறது இல்ல. அதே நேரம் மருந்துகள் அப்படி இல்ல. அத்தியாவசியமானவை. விலைமதிப்பற்ற உயிரை காப்பவை. சில நோய்களுக்குலாம் மாசம் மாசம் 50 ஆயிரத்துக்கு மருந்து வாங்கி சாப்டாதான் உயிர்வாழ முடியும் என்கிற நிலை பல வீடுகளில இருக்குது. அதனால ஏழை எளிய மக்களுக்கு மருந்துகள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு ரொம்பவே பய்னுள்ளதா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. ஏற்கெனவே என்னவா இருந்தது, இப்ப ஜிஎஸ்டி குறைச்சிருக்றது மூலமா எவ்ளவு ரூபா குறையும். எப்படியெல்லாம் மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்கிறத பாக்லாம்.
